கடந்த ஒன்பது மாதங்களில் நாட்டின் மூன்று முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் (கட்டுநாயக்க, மத்தள, யாழ்ப்பாணம்) வழியாக மொத்தம் 7.56 மில்லியன் (75.6 லட்சம்) பயணிகள் பயணித்துள்ளதாக விமானம் மற்றும் விமான நிலைய சேவைகள் நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டின் இக் காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், சர்வதேச பயணிகள் போக்குவரத்து 14.08 சதவீதம் அதிகரித்துள்ளது.
விமானப் போக்குவரத்தின் எண்ணிக்கையும் 15.35 சதவீதம் உயர்ந்துள்ளது.
வருகைப் பயணிகள் 49.15 சதவீதமாகவும், புறப்பாட்டுப் பயணிகள் 50.85 சதவீதமாகவும் இருந்தனர்.
இடைவழிப் பயணிகள் 6, 80000க்கு மேல் நிலையாக இருந்துள்ளனர்.
விமானம் மூலம் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.7 மில்லியன் ஆகும், இது மொத்த வருகையில் கிட்டத்தட்ட 46 சதவீதத்தை உள்ளடக்கியது.
உள்நாட்டுப் பயணச் சந்தையும் 54 சதவீதமாக சமநிலையில் உள்ளது.
சரக்குப் போக்குவரத்து மட்டும் 4.01 சதவீதம் குறைந்து 140,569 மெட்ரிக் தொன்களாக உள்ளது.
உலகளாவிய சரக்கு நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










