உயிரினங்கள் வாழும் புதிய கோள் கண்டுபிடிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பூமியிலிருந்து தொலைதூரத்தில் உள்ள நட்சத்திரம் ஒன்றை வலம் வரும் கோளொன்று உயிரினங்களின் தாயகமாக இருக்கலாம் என்பதற்கான புதிய ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் நாசா நிறுவனம் இயக்கும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்விலேயே இது கண்டறியப்பட்டுள்ளது.

K2-18b எனப்படும் கோளில் பூமியில் உள்ள உயிரினங்களால் மாத்திரம் உற்பத்தி செய்யப்படும் மூலக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்தக்கிரகத்தில் உயிரினங்கள் வாழும் சாத்தியத்தை உறுதிப்படுத்த, எதிர்காலத்தில் மேலும் பல ஆய்வுகள் மற்றும் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டியதுள்ளது என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வானியல் நிறுவனத்தின் முன்னணி ஆராய்ச்சியாளரான பேராசிரியர் நிக்கு மதுசூதன் குறிப்பிட்டுள்ளார்.

K2-18b பூமியை விட இரண்டரை மடங்கு பெரியது எனவும், பூமியிலிருந்து 700 டிரில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது எனவும் குறிப்பிடப்படுகிறது.

சூரிய மண்டலத்திற்கு அப்பால் உள்ள சுமார் 5,800 கோள்கள், எக்ஸோப்ளானெட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை 1990 ஆம் ஆண்டுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஹைசியன் உலகங்கள் எனப்படும் எக்ஸோப்ளானெட்டுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அவை நுண்ணுயிரிகள் வாழக்கூடிய திரவ நீர், கடலால் மூடப்பட்டிருக்கும் மற்றும் ஹைட்ரஜன் நிறைந்த வளிமண்டலத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டில் ஏவப்பட்டு 2022 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்த வெப் தொலைக்காட்டி முந்தைய அவதானிப்புகளில் K2-18 b இன் வளிமண்டலத்தில் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஒக்சைட் ஆகியவற்றை அடையாளம் கண்டுள்ளன.

எக்ஸோப்ளானெட்டின் வளிமண்டலத்தில் கார்பன் அடிப்படையிலான மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects