மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய இராணுவ உயர் அதிகாரிகள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜுடன் கலந்துரையாடலில் இன்று (11.02.2026) ஈடுபட்டனர்.

டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாலங்களை இந்திய இராணுவத்துடன் இணைந்து நிர்மானிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மாவட்டத்தில் டிட்வா புயலினால் பல பாலங்கள் பகுதியளவிலும் முழுமையாகவும் சேதமடைந்துள்ள பாலங்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் அதிகாரிகளினால் வழங்கப்பட்டன.

மேலும் நிபுணர் குழுவினர் பாதிக்கப்பட்ட பாலங்களுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ளவுமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் என்.கதிசன், நிறைவேற்று பொறியியலாளர் எஸ்.கிரிசாந்தன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் கே.வில்வராசா, பொறியியலாளர் எஸ்.கலாதரன், மாவட்ட செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்களான வி.நவதீதன், ரி.நிர்மலராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects