2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சி மாநாட்டின் முதலாவது தினத்தில், நாட்டின் சுற்றுலாத்துறை குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக இலங்கை வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கை சுற்றுலாத்துறையில் அதிக ஆற்றலை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை எவ்வாறு உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த சுற்றுலாத் துறையினை உருவாக்க முடியும் என்பது குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளது.
இதனிடையே, ‘வளர்ச்சிக்கான நுழைவாயில் – ஆசியாவின் வளர்ந்து வரும் வாய்ப்பு’ எனும் தொனிப்பொருளில் இந்த உச்சி மாநாடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










