நிதி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்கலாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூவாக அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதுகுறித்து நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 1,860.6 பில்லியனாக இருந்த அரச வருமானம், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 24.8 சதவீதம் அதிகரித்து 2,321.7 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது. இந்த அரச வருமான உயர்வுக்கு வரி வருமானம் பிரதான பங்களிப்பை வழங்கியுள்ளது.

அதற்கமைய, 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் வரி வருமானம் 2,151.1 பில்லியன் ரூபாவாக 25.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் 1,709.3 பில்லியன் ரூபாவாக காணப்பட்டுள்ளது.

இந்த வரி வருமான அதிகரிப்புக்கு மோட்டார் வாகனங்களுக்கான உற்பத்தி வரி வருமானம், பெறுமதி சேர் வரி வருமானம், சுங்க இறக்குமதி வரிகள், வருமான வரி, விசேட வணிகப் பொருட்கள் மீதான வரிகள், சமூகப் பாதுகாப்பு வரிகள், பெற்றோலியப் பொருட்கள் மூலம் கிடைத்த வரிகள், மதுவரி வருமானம், மற்றும் செஸ் வரி போன்ற பல காரணிகள் முக்கியமாகப் பங்களித்துள்ளன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects