வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடங்கொட இடைமாறல்களுக்கு இடைப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (18.02.2026) முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

அதன் பிரகாரம், இந்த பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படும் காலப்பகுதியில், குறித்த இடைமாறல்களுக்கு இடைப்பட்ட பகுதிகள் இடைக்கிடையே தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் பயணிக்கும் வாகனங்களுக்குச் சிறிய அளவிலான காலதாமதங்கள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறும், வீதி சமிக்ஞைகள் மற்றும் காவல்துறை உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects