ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ரஷ்யாவின் தூரக் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் (Kamchatka Peninsula) இந்த ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி முதல் வரலாறு காணாத பனிப்பொழிவு பெய்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதனால் தலைநகர் மொஸ்கோ மற்றும் பல்வேறு நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், 50 ஆண்டுகளுக்கும் மேலான சாதனைகளை முறியடித்துள்ள இப் பனிப்பொழிவை உள்ளூர் மக்கள் “பனி அபோகாலிப்ஸ்” (Snow Apocalypse) என அழைக்கின்றனர்.

குறிப்பாக, அங்கு பனிக் குவியல்கள் 10 முதல் 40 அடி உயரம் வரை உயர்ந்துள்ளன. 

நான்கு மாடி உயரமுள்ள கட்டிடங்கள் கூட பனிக்குள் புதைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மின்சாரம் இன்றி, போக்குவரத்து முடங்கி, விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டு அந்தத் தீபகற்பமே தனித்துவிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கடும் பனிப்பொழிவால் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் அங்கு அவசர கால நிலைப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects