கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் பிரதான புகையிரத மார்க்கத்தில் இயக்க திட்டமிடப்பட்டிருந்த இரண்டு இரவு தபால் புகையிரதங்கள் உட்பட ஐந்து புகையிரத சேவைகள் இன்று (22.10.2025) இரத்து செய்யப்பட்டுள்ளன.
இரத்து செய்யப்பட்ட புகையிரத சேவைகள் பின்வருமாறு,
பிற்பகல் 03.35 மணிக்கு – கொழும்பு கோட்டை முதல் கண்டி வரை
இரவு 08.30 மணிக்கு – கொழும்பு கோட்டை முதல் பதுளை வரை (இரவு தபால்)
பிற்பகல் 03.00 கண்டி முதல் கொழும்பு கோட்டை வரை
பிற்பகல் 03.25 கண்டி முதல் கொழும்பு கோட்டை வரை
மாலை 06.00 பதுளை முதல் கொழும்பு கோட்டை வரை (இரவு தபால்)
மலையக புகையிரத பாதையில் இருபுறமும் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் புகையிரத சேவைகள் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










