ஜனாதிபதி செயலகத்திற்கு விஜயம் செய்த கம்பஹா கஹடோவிட்ட முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவர்கள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கம்பஹா கஹடோவிட்ட முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் மாணவிகளுக்கு ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்யும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு 22.10.2025 அன்று கிடைத்தது.

இந் நிகழ்வில் ஜனாதிபதி அலுவலகத்தின் முப்படை ஒருங்கிணைப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல மற்றும் கம்பஹா கஹடோவிட்ட முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் எம். எம். எம். ஸர்ஜூன் ஆகியோருடன் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவுடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக இந் நிகழ்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இலங்கை நாட்டின் பிள்ளைகள் என்ற வகையில் சமாதானம், ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதன் மூலம் வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்று மாணவிகளிடையே உரையாற்றிய ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (ஊழல் எதிர்ப்பு) சட்டத்தரணி கே. என். எம் குமாரசிங்க தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்த வகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், பாடசாலைக்கு பெறுமதி மிக்க மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects