விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான 5,000 ரூபா மாதாந்தக் கொடுப்பனவை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிதியுதவிகள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்ததாக அதன் உப தவிசாளர் பேராசிரியர் வசந்த லியனகே தெரிவித்தார்.
இதற்கமைய, நிலுவைப் பணமும் உள்ளடங்களாக இந்த மாதத்தில் இருந்து இக்கொடுப்பனவை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உப தவிசாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










