கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் லங்கா ஐஓசி சிரேஷ்ட அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பொன்று 10.12.2024 அன்று திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டிபாக் தாஸ் உட்பட குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
சுகாதார ஆதரவுக்கான ஆளுநரின் கோரிக்கையின் பேரில், LIOC நிறுவனம் டயாலிசிஸ் இயந்திரங்களை நன்கொடையாக வழங்குவதாக உறுதியளித்ததுடன் CT ஸ்கேன் இயந்திரத்திற்கு நிதியுதவியினையும் வழங்கியது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇