இலங்கைக்கு இந்தியாவால் கிடைத்த உதவி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இந்தியா, இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி நிவாரணத்தை வழங்கியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றுக்கு இடையேயான சிறப்புப் பரிமாற்ற ஏற்பாட்டின் கீழ், மீதமுள்ள நிலுவைத் தொகையைப் புதுப்பித்து, இந்த 1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி நிவாரணத்தை இந்தியா வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் மொத்த அதிகாரபூர்வ இருப்பு, 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் தற்போதைய உதவி முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

பொருளாதார நெருக்கடி ஆரம்பித்ததிலிருந்து, இலங்கைக்கு இந்தியா வழங்கும் மொத்த உதவி 7 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.

இதில் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான மானியங்கள் அடங்குகின்றன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects