மண்சரிவு மற்றும் புகையிரதம் தடம் புரண்டதால் 19.10.2025 அன்று முதல் தடைபட்டிருந்த கண்டிக்கும் கொழும்புக்கும் இடையிலான புகையிரத சேவைகள் இன்று (23.10.2025) காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பலத்த மழையினால் ரம்புக்கனைக்கும் பேராதெனியவுக்கும் இடையிலான புகையிரத மார்க்கத்தில் குறிப்பாக கடிகமுவ மற்றும் பலான நிலையங்களுக்கு இடையில், பல இடங்களில் மண்சரிவு மற்றும் மண்ணரிப்பு ஏற்பட்டது.
இதனால் 22.10.2025 அன்றும் பல புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டன.
இருப்பினும், இன்றைய தினம் காலை ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










