வடமாகாண சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தினை தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
வட மாகாண சுற்றுலாத்துறையின் அனுசரணையில் வவுனியா பல்கலைக்கழகத்தின் வியாபார பீடத்தின் நெறிப்படுத்தலில் வியாபாரக்கற்கைகள் பீட பீடாதிபதி பேராசிரியர் யோ.நந்தகோபன் தலைமையில் இக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர், மேலதிக மாவட்ட செயலாளர் நிர்வாகம், வடமாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், வன வள அதிகாரிகள், வனஜீவராசிகள் அதிகாரிகள், பொறியியலாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான பங்குதாரர்கள் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த கலந்துரையாடலின் இணைப்பாளராக வவுனியா பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையார் சி.சிவநேந்திரா செயற்பட்டார்.














இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










