ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரு லட்சம் தென்னங் கன்றுகளை நாட்டி புதிய தெங்கு முக்கோண வலயமொன்றை ஸ்தாபிக்க தெங்கு அபிவிருத்தி சபை தீர்மானித்துள்ளது.
இதன்பிரகாரம் ரத்ன, வீரகெட்டிய மற்றும் வலஸ்முல்ல ஆகிய பகுதிகளை மையப்படுத்தி இந்த தென்னங் கன்றுகள் நாட்டப்படவுள்ளன.
இதற்கான நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, குறித்த பகுதிகளில் உள்ள வீடொன்றிற்கு தலா ஐந்து தென்னை கன்றுகள் விநியோகிக்கப்படவுள்ளன.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇