மட்டக்களப்பு தேர்தல் திணைக்களம் மட்டக்களப்பில் உள்ள தேசிய பாடசாலை மாணவர்களிற்கிடையே மாவட்ட மட்ட விவாதப் போட்டி மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் எம்.வீ.எம்.சுபியான் அவர்களின் வழிகாட்டல் மற்றும் தலைமையில் இடம்பெற்றது.
இப்போட்டியானது தேர்தல் மற்றும் ஜனநாயகம் போன்ற கருப்பொருட்களை மையமாக கொண்டு இடம்பெற்ற விவாதப் போட்டியில் 14 பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றினர்.
இதில் முதலாம் இடத்தினைப் மட்டக்களப்பு சிசிலியா தேசிய பெண்கள் கல்லூரியின் விவாத அணியினர் பெற்றிருந்தனர்.
இப்போட்டியில் கதிரவன், த.இன்பராசா ஆகியோர் நடுவர்களாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇