வடக்கு புகையிரத மார்க்கத்தில் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், அம்பன்பொல மற்றும் கல்கமுவ புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில், புகையிரதத்துடன் காட்டு யானையொன்று மோதியதன் காரணமாக இப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் புகையிரதம் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வடக்கு மார்க்கத்தின் புகையிரத போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










