மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளராக தயாநிதி மதன் நியமனம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளராக தயாநிதி மதன் 17.04.2026 அன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.

2012 ஆம் ஆண்டு இலங்கை கணக்காளர் சேவை பரீட்சையில் சித்தியடைந்து, வெலிகந்தை பிரதேச செயலகத்தில் 2013 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியும், கட்டடங்கள் திணைக்களத்தில் 2019 முதல் 2026 வரையான காலப்பகுதியிலும் கணக்காளராக கடமையாற்றியுள்ளார்.

அக்கரைப்பற்று கண்ணகி வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியையும் அக்கரைப்பற்று இராமகிருஸ்ணா கல்லூரியில் உயர்கல்வியையும் கற்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டதுடன் தற்போது முதுமாணி முகாமைத்துவ கற்கையை மேற்கொண்டு வருகின்றார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects