ஆயுர்வேத மருத்துவ துறைக்கு 303 புதிய நியமனங்கள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அரச சேவையில் 72,000 பேரை இணைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக உள்ளூர் ஆயுர்வேத வைத்தியத் துறையில் பணியாற்றுவதற்கு 7000 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இதனை முன்னிட்டு சமூக சுகாதார மருத்துவ அதிகாரிகள் உட்பட 303 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு 03.11.2025 அன்று கொழும்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

இதற்கமைவாக, மொத்தம் 72,000 பேரை அரச சேவையில் சேர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதில் சுகாதார அமைச்சுக்கு மாத்திரம் சுமார் 9,000 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இவர்களில் சுமார் 7,000 பேரை ஏற்கனவே ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 06 மாதங்களில், 4,141 தாதிய அதிகாரிகள் மற்றும் தாதியர்கள் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உள்ளூர் ஆயுர்வேத மருத்துவத் துறைக்கு ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான மருத்துவ அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஆயுர்வேத சேவையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் நோயாளிகளுக்கு தரமான பராமரிப்பை வழங்குவதற்கும் இதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆயுர்வேத மருத்துவ சேவையில் உள்ள முதன்மை தர மருத்துவ அதிகாரி பதவிகளுக்கான வெற்றிடங்களின் எண்ணிக்கையை கணக்கிற் கொண்டு, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின்படி இந்த ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள ஆயுர்வேதத் துறை நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects