இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையிலான 35 ஆவது சர்வதேச கடல்சார் எல்லைக் கூட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை, இந்திய கடற்படைகள் மற்றும் கடலோர காவற்படைகளுக்கு இடையிலான 35 ஆவது சர்வதேச கடல்சார் எல்லைக் கோடு சந்திப்பு 11.11.2025 அன்று காங்கேசன்துறைக்கு வடக்கே உள்ள இந்தோ – இலங்கை கடல்சார் எல்லைக் கோட்டில் INS சுகன்யா கப்பலில் நடைபெற்றது.

இரு நாடுகளின் கடற்படைகள் மற்றும் கடலோர காவற்படையினர் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பகிரப்பட்ட கடல்சார் சவால்களை எதிர்கொள்ள செயற்படுத்தக்கூடிய கூட்டு உத்திகளை ஆராய்வதும், உறவுகளை வலுப்படுத்துவதும் வருடாந்திர IMBL கூட்டத்தின் நோக்கமாக காணப்படுகிறது.

வடக்கு கடற்படைப் பகுதியின் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தலைமையில் இலங்கை குழுவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பகுதியின் கொடி அதிகாரி ரியர் அட்மிரல் சதீஷ் ஷெனாய் தலைமையில் இந்திய குழுவும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், முந்தைய சந்திப்புகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்துள்ளனர். 

மேலும் IMBL முழுவதும் வெளிப்படும் கடல்சார் சவால்களை ஒன்றிணைந்து எதிர்த்துப் போராடுவதற்கான தங்கள் உறுதியை கட்சிகள் வலுப்படுத்தின.

இந் நிகழ்வில் வட மத்திய கடற்படைப் பகுதியின் பிரதித் தளபதி கொமடோர் அருண வீரசிங்க, இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவற்படையின் சிரேஸ்ட அதிகாரிகள் குழு மற்றும் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் ஆனந்த் முகுந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects