உலகக் கிண்ண கால்பந்து போட்டியைக் காண வரும் ரசிகர்களுக்கு சிறப்பு விரைவு விசா திட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டியைக் காண வரும் ரசிகர்களுக்காக, சிறப்பு விரைவு விசா வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடாவில் அடுத்த ஆண்டு ஜூன் முதல் ஜூலை வரை உலகக் கிண்ண கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. 

அதன் அடிப்படையில், அமெரிக்காவில் நடக்கும் போட்டியைக் காண தற்போதே இலட்சக்கணக்கானோர் அனுமதி நுழைவுச் சீட்டுக்களை முன்பதிவு செய்துள்ளனர். 

எனினும், ட்ரம்பின் விசா கட்டுப்பாடுகள் கால்பந்து போட்டியைக் காண வரும் ரசிகர்களைப் பாதிக்குமா என்ற சந்தேகம் இருந்து வந்தது. 

இந் நிலையில், வெள்ளை மாளிகையில் ‘ஃபிஃபா’ (FIFA) எனப்படும் சர்வதேச கால்பந்து சங்கத்தின் தலைவர் ஜியான்னி இன்பான்டினோ (Gianni Infantino) உடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ‘ஃபிஃபா பாஸ்’ (FIFA Pass) என்ற புதிய திட்டத்தை அறிவித்தார். 

இந்த திட்டத்தின் கீழ், ‘ஃபிஃபா’ மூலம் நேரடியாக அனுமதி நுழைவுச் சீட்டுக்களை வாங்கிய ரசிகர்களுக்கு விசா நேர்காணலில் முன்னுரிமை அளிக்கப்படும். 

ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர் எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects