காத்தான்குடி பிரதேச செயல கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக் கூட்டம் 19.11.2025 அன்று பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மௌஜுத் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கணக்காய்வு அத்தியட்சகர் ரொபர்ட் அலோசியஸ், பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எஸ்.சசிகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது திட்டமிடல், நிதி, காணி மற்றும் நிருவாகம், அஸ்வெசும, சமுர்த்தி, மகளிர், தேசிய அடையாள அட்டை, பதிவாளர் ஆகிய பிரிவுகள் மற்றும் சமூக பராமரிப்பு நிலையம், சமுர்த்தி வங்கிகள் என்பன தொடர்பாக மூன்றாம் காலாண்டிற்கான மீளாய்வுகள் பிரிவிற்குப் பொறுப்பான உத்தியோகத்தர்களினால் முன்னளிக்கை மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கணக்காய்வு பற்றிய விடயங்கள், முன்னேற்றம் தொடர்பான அறிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பாக கணக்காய்வு அத்தியட்சகர் மற்றும் பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஆகியோரினால் விளக்கமளிக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் பிரதேச செயலக நிறைவேற்றுத்தர, பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிளைத் தலைவர்கள், பதவிநிலை உதவியாளர்கள், விடய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects