ஏலத்தில் விடப்பட்ட டைட்டானிக் கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட கடிகாரம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

டைட்டானிக் கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட கடிகாரம் ஏலத்தில் விடப்பட்டது.

1912 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவுக்கு டைட்டானிக் என்ற கப்பல் புறப்பட்டது.

அந்த கப்பல் அத்திலாந்திக் பெருங்கடலில் சென்றபோது பனிப்பாறையில் மோதியது. உலகையே உலுக்கிய இந்த விபத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்து 1997 ஆம் ஆண்டு டைட்டானிக் என்ற பெயரில் திரைப்படமாக வந்து பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில், அந்த கப்பலில் பயணித்தவர்களின் உடைமைகள் மீட்கப்பட்டு அவ்வப்போது ஏலத்துக்கு விடப்படுகின்றன. அந்தவகையில் அமெரிக்க தொழிலதிபரான இசிடோர் ஸ்ட்ராஸ் என்ற பயணியின் தங்க கடிகாரம் ஒன்று பிரித்தானியாவின் வில்ட்ஷயர் நகரில் ஏலத்துக்கு விடப்பட்டது.

இந்த கடிகாரம் சுமார் 1.78 மில்லியன் யூரோவிற்கு விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இது டைட்டானிக் கப்பல் தொடர்பான நினைவுப்பொருட்களின் அதிகபட்ச ஏலத்தொகை ஆகும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects