இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் தலைமையில் நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் 04.10.2025 மற்றும் 05.10.2025 ஆகிய தினங்களில் நடைபெற்றது.
இப்பட்டமளிப்பு நிகழ்வில் மொத்தமாக உள்வாரி, வெளிவாரி மாணவர்களுக்கான பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு முடித்தவர்கள் என மொத்தமாக 1966 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இப்பட்டமளிப்பு விழாவின் முதலாம் நாள் நிகழ்வில் கல்வியமைச்சின் செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்திரி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இப்பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் தலா மூன்று அமர்வுகளாக நடைபெற்றன.
இதன்போது பேராசிரியர் சிவசுப்ரமணியம் பத்மநாதனுக்கு வரலாற்றுத்துறைக்கான கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது.
மேலும் பட்டமளிப்பு விழாவின் முதலாம் நாளின் முதலாவது அமர்வின் போது 240 பட்டதாரிகளுக்கும் இரண்டாவது மூன்றாவது அமர்வுகளின் போது முறையே 345 மற்றும் 400 பட்டதாரிகளுக்கும் முதுமாணி, இளங்கலைமாணி உட்பட விவசாயத்துறை, கலைத்துறை, வணிக முகாமைத்துவத்துறை மற்றும் அழகியல் கற்கைகள் துறை, மருத்துவத்துறை, விஞ்ஞானத்துறை மற்றும் சித்தமருத்துவத்துறைகளில் பட்டங்கள் வழங்கப்பட்டன.
மேலும் விழாவின் இரண்டாம் நாளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் அமர்வுகளின்போது முறையே 261, 365, 355 பட்டதாரிகளுக்கும் வணிக முகாமைத்துவத்துறை, தொழில்நுட்பத்துறை, அழகியல்கற்கைத்துறை, பிரயோக விஞ்ஞானத்துறை, தொடர்பாடல் முகாமைத்துவத்துறை, கலைத்துறை, மருத்துவத்துறை, வணிக முகாமைத்துவத்துறை ஆகியவற்றிலிருந்து உள்வாரி மற்றும் வெளிவாரிப் பட்டதாரி மாணவர்களுக்கான பட்டங்கள் வழங்கட்டமை குறிப்பிடத்தக்கது.

















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










