சர்வதேச நாய்கள் தினம் 2024!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மனிதர்களின் உற்ற தோழன் என வர்ணிக்கப்படும் நாய்களை போற்றும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 26 அன்று உலகம் முழுவதும் சர்வதேச நாய் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

2004ஆம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற விலங்கு ஆர்வலரான கொலீன் பைஜால், நாய் உரிமையின் பல நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், செல்லப்பிராணியாக நாயின் வளர்ப்பை ஊக்குவிக்கவும் இந்த நாள் நிறுவப்பட்டது.

நாய்கள் தோழமை, நிபந்தனையற்ற அன்பு மற்றும் பல ஆரோக்கிய நலன்களை வழங்குகின்றன. நாய்களுடன் தொடர்புகொள்வது மன அழுத்தத்தைக் குறைக்கும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பார்வையற்றோருக்கு வழிகாட்டுதல், வெடிமருந்துகளை மோப்பம் பிடித்தல் மற்றும் போலீஸ் மற்றும் ராணுவத்திற்கு உதவுதல் போன்ற மதிப்புமிக்க சேவைகளையும் செய்கின்றன.

நாய்களைப் பற்றி அதிகம் அறியப்படாத சில தகவல்கள் பின்வருமாறு :-

நாய்களால் மனித உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும். மனிதர்களைப் போலவே அவற்றாலும் கனவு காண முடியும்.

நாயின் வாசனை உணர்வு மனிதனை விட 10,000 முதல் 1,00,000 மடங்கு சக்தி வாய்ந்தது. நாய்கள் 250 வார்த்தைகள் மற்றும் கட்டளைகள் வரை கற்றுக்கொள்ள முடியும்.

பழமையான நாய் இனம் சலுகி என்று நம்பப்படுகிறது.

சர்வதேச நாய்கள் தினத்தின் வரலாறு

2004 ஆம் ஆண்டு செல்லப்பிராணி மற்றும் குடும்ப வாழ்க்கை முறை நிபுணரானகொலீன் பைஜ் ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதியை சர்வதேச நாய் தினமாக கொண்டாட முடிவு செய்தார். விலங்கு மீட்பு வழக்கறிஞராகவும் செயல்பட்டு வந்த பைஜ், பத்து வயதில் தனது செல்லபிராணியான ஷெல்டியை தத்தெடுத்த நாள் என்பதால் இந்த நாளை தேர்வு செய்தார்.

சர்வதேச நாய்கள் தினத்தின் குறிக்கோள்

தங்குமிடங்களில் இருந்து மீட்கப்பட வேண்டிய நாய்களின் எண்ணிக்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், செல்லப்பிராணிகளை வாங்குவதை விட தத்தெடுக்க மக்களை ஊக்குவிப்பதும் அவரது குறிக்கோளாக இருந்தது.

சுற்றுசூழல்களுக்கு ஏற்ப செல்லப்பிராணிகள் தேர்வு

நாய்களை நேசிப்பவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டு நாய் இனங்களை செல்லப்பிராணிகளாக தேர்வு செய்கிறார்கள், வானிலை மாற்றங்கள் நாய்களை பாதிக்கின்றன. சில நாய் இனங்கள் கோடைகால சூழல்களுக்கு ஏற்றதாக உள்ளன. சில நாய்கள் குளிர் சூழலை விரும்புகின்றன. ஒரு செல்லப்பிராணியை வாங்கும் போது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலையைக் கருத்தில் கொள்வது முக்கியம்.

சர்வதேச நாய்கள் தினக் கொண்டாட்டம்

இந்த நாளைக் கொண்டாட உங்களிடம் செல்லப்பிராணியான நாய் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உணவு மற்றும் தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகளுக்காக அடிக்கடி போராடும் தெரு நாய்களுக்காக உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்.

ஆதரவற்ற நாய்களுக்கு உதவுங்கள்

ஆதரவு அற்ற தெருநாய்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை வழங்குவது முதல் தடுப்பூசி போடுவதற்கு உதவுவது வரை அவர்களுக்காக உங்களால் நிறைய செய்ய முடியும். அவர்களுடன் நேரத்தை செலவிடுவது மற்றும் கால்நடை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்வது போன்ற செயல்களை ஊக்குவிக்கவே இந்த தினம் கொண்டாடப்படுகின்றது.

சர்வதேச நாய்கள் தினத்தில் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் இங்கே:

நாய்களுக்கு பிடித்த உணவுகளை கொடுத்து, அவர்களுடன் நீண்ட நடைப்பயணத்தை மேற்கொள்ளுங்கள். இது அவர்களின் செயல்களுக்கு நன்றி தெரிவிக்க உதவும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects