இன்று 159 ஆவது பொலிஸ் தினம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

159 ஆவது பொலிஸ் தினம் இன்று (03.09.2025) கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு பொலிஸ் தினம் “சட்டத்தை நிலைநிறுத்துவோம் சமாதானத்தைப் பேணுவோம்” எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படுகிறது.

1866 செப்டம்பர் ர் 03 ஆம் திகதியன்று ஶ்ரீமத் ஜீ.டப்ள்யூ.ஆர் கெம்பல் அரசியலமைப்பின் படி இலங்கையின் முதலாவது பொலிஸ்மா அதிபராக நியமனம் பெற்ற தினமே பொலிஸ் தினமாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய பொலிஸ் மா அதிபரான சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இலங்கையின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பொறுப்பேற்று இரண்டு வாரங்களில் 159 ஆவது பொலிஸ் தினம் கொண்டாடப்படுகிறது.

159 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு திம்பிரிகஸ்யாய பொலிஸ் மைதானத்தில் இன்று (03.09.2025) பிற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் விசேட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects