2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான காலக்கெடு இன்று (06) நள்ளிரவுடன் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியிட்ட 8361 வேட்பாளர்களில் 1985 பேர் மட்டுமே அந்த அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ.ரத்நாயக்க குறிப்பிட்டார்.
குறித்த காலத்திற்குள் உரிய அறிக்கைகளை வழங்காத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் உள்ளுராட்சி சபை தேர்தலை விரைந்து நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇