இந்த மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் மாத்திரம் 96 ஆயிரத்து 329 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அதன் அடிப்படையில் , இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 12 இலட்சத்து 21 ஆயிரத்து 784 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து நாட்டுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்தியாவில் இருந்து 18,760 பேரும், ரஷ்யாவில் இருந்து 15,885 பேரும், ஜேர்மனியில் இருந்து 9,166 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇