தங்களால் முன்னெடுக்கப்படும் தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் ஒருநாள் சேவை உட்பட பொதுமக்களுக்கான எவ்வித சேவைகளும் நாளைய தினம் (14.11.2024) இடம்பெறமாட்டாது என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆட்பதிவு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுத்தேர்தலுக்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையில் ஆட்பதிவு திணைக்கள உத்தியோகத்தர்களும் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்காரணமாக தேசிய அடையாள அட்டை உட்பட இதர சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நாளைய தினம் (14.11.2024) திணைக்களத்துக்கு வருகைதருவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் ஆட்பதிவு திணைக்களம் பொதுமக்களைக் கோரியுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇