இலங்கைக்கான புதிய மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் 24.03.2025 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்.
பிரான்ஸ், பலஸ்தீன் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்கள் இந்த நிகழ்வில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- பிரான்ஸ் தூதுவராக – ரெமி லம்பர்ட் (Mr. Remi Lambert)
- பலஸ்தீன தூதுவராக – இஹாப் ஐ.எம். கலீல் (Mr. Ihab I.M. Khalil)
- நேபாள தூதுவராக – கலாநிதி பூர்ண பகதூர் நேபாளி (Dr. Purna Bahadur Nepali)
இந்நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










