உள்ளூர் முட்டை ஒன்றின் விலையை 3.00 ரூபாயால் அதிகரிக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
வெற் வரி அதிகரிப்பினால் உள்ளூர் முட்டை உற்பத்திச் செலவு 8.00 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், முட்டை ஒன்றின் விலை 3.00 ரூபாயினால் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சரத் ரத்நாயக்க குறிப்பிடுகின்றார்.
அதன்படி, கோழிப்பண்ணையில் இருந்து 45 ரூபாய்க்கு விற்கப்படும் உள்ளூர் முட்டை ஒன்றின் மொத்த விலை 48 ரூபாயாக அறவிடப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇