இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து இம் மாதம் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 20 இலட்சத்து 54 ஆயிரத்து 980 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 463,474 ஆகும்.

அத்தோடு, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 187,282 சுற்றுலாப் பயணிகளும்,  ரஷ்யாவிலிருற்து 153,336 சுற்றுலாப் பயணிகளும்,  சீனாவிலிருந்து 119,179 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 128,774 சுற்றுலாப் பயணிகளும்,  பிரான்ஸிலிருந்து 100,076 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 92,180 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு  வருகை தந்துள்ளனர்.

அதன்படி, இவ்வாண்டின் நவம்பர் மாதத்தின் முதல் 23 நாட்களில் 164,293 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects