கிழக்கு மாகாணத்தில் உள்ள நுண், சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தி முயற்சியாளர்களுக்காக 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இலவச வர்த்தகச் சந்தை நடாத்தப்பட உள்ளது.
இந்த வர்த்தகச் சந்தை, அவர்களது உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகளை அதிகரிக்கவும், அவர்களை ஊக்குவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வருடாந்த விற்பனைக் கூடார நிகழ்வு திருகோணமலை மக்கேய்சர் விளையாட்டு மைதானத்தில், 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 முதல் 28 ஆம் திகதி வரை, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகரவின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இச் சந்தையில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் வாய்ப்பு பெற உள்ளனர்.
இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் முயற்சியாளர்கள், தங்களது விண்ணப்பங்களை, 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் திகதிக்கு முன்பாக கிழக்கு மாகாண கிராமிய தொழிற்துறைத் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










