சீரற்ற காலநிலையால் மத்திய மலை நாட்டு ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரை நானுஓயா புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மலையக ரயில் மார்க்கத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததில் 22.11.2023 அன்று நான்கு தடவைகள் ரயில் மார்க்கம் தடைபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
மத்திய மலைநாட்டில் அதிக மழை பெய்து வருவதால் 22.11.2023 அன்று இரண்டு இரவு நேர அஞ்சல் ரயில்கள் இரத்து செய்யப்பட்டன.
அதன் பிரகாரம் இன்று காலை 5 மணியளவில் 31ஆம் இலக்க சுரங்கப்பாதைக்கு அருகில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் ஒஹிய மற்றும் ஹிதல்கசின்ன நிலையங்களுக்கு இடையிலான ரயில் மார்க்கம் தடைப்பட்டது .
தண்டவாளத்தை சுத்தம் செய்த பின்னர் , அதே இடத்தில் காலை 10.30 மணிக்கு இரண்டாவது முறையாகவும், 12.30 மணிக்கு மூன்றாவது முறையாகவும் தடைபட்டது.
இதேவேளை, நேற்றிரவு 10.15 மணியளவில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் ஹாலி-எல மற்றும் தெமோதர ஆகிய பகுதிகளுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇