2026 பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப் பதிவு – Verite Research

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2026 பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப் பதிவாகியுள்ளதாக, ஆசியாவின் அரச மற்றும் தனியார் துறைகள் தொடர்பான மூலோபாய பகுப்பாய்வு மற்றும் ஆலோசனைகளை வழங்கும் சுயாதீன நிறுவனமான Verite Research தெரிவித்துள்ளது.

அந்நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் கெலப் (Gallup) பாணியிலான “நாட்டின் மனநிலை” (Mood of the Nation) எனும் சமீபத்திய கருத்துக்கணிப்பு ஆய்வின் ஊடாகவே இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நான்கு வருடகால கருத்துக்கணிப்பு வரலாற்றில், நாட்டின் நிலைமை குறித்த மக்களின் திருப்தி நிலையானது 50% ஐ விடவும் விஞ்சிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்னர் காணப்பட்ட 62% எனும் மக்கள் அங்கீகார வீதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் அப்பெறுமதி நிலையான மட்டத்தில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, அரசாங்கத்தின் மீதான அதிருப்தி வீதமானது 2025 பெப்ரவரியில் மேற்கொள்ளப்பட்ட முந்தைய கருத்துக் கணிப்பில் இருந்ததைப் போலவே குறைவாகவும் மாற்றமின்றியும் காணப்படுகிறது.

வெரிட்டே ரிசர்ச்சின் தகவலின்படி, இக்கருத்துக் கணிப்பின் நான்கு வருட வரலாற்றில் முதல் முறையாக, தற்போதைய பொருளாதார நிலைமைகள் “நன்று” அல்லது “மிகவும் நன்று” என மதிப்பிட்டவர்களின் எண்ணிக்கை, அதனை “மோசம்” என மதிப்பிட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது.

அத்துடன் பொருளாதாரக் கண்ணோட்டம் குறித்த கருத்துக்களும் மேம்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொருளாதாரம் “மேம்பட்டு வருகின்றது” எனக் கூறியவர்களின் எண்ணிக்கை ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த 55% இல் இருந்த போதிலும் தற்போதைய கருத்துக்கணிப்பில் 64% ஆக அதிகரித்துள்ளதாக வெரிட்டே ரிசர்ச் சுட்டிக்காட்டியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects