மாணவர்களுக்கான விமானவியல் அடிப்படைப் பாடநெறிக்கான திகதிகள் அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பாடசாலை மாணவர்களின் விமானவியல் அறிவை மேம்படுத்தும் நோக்கில், ஸ்ரீலங்கா விமானப்படை அருங்காட்சியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ஆரம்பநிலையாளர்களுக்கான விமானவியல் அடிப்படைப் பாடநெறி” இம் மாதம் 25 ஆம் மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

அதன் அடிப்படையில், தரம் 6 முதல் தரம் 13 வரை பயிலும் மாணவர்கள் இப்பாடநெறியில் இணைந்து கொள்ளலாம்.

இது இரண்டு நாட்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சித் திட்டமாகும்.

இப் பயிற்சி வகுப்புக்கள் இரத்மலானையில் அமைந்துள்ள விமானப்படை அருங்காட்சியகத்தில் இடம்பெறவுள்ளன.

ஒரு மாணவருக்கான பாடநெறிக் கட்டணம் 5,000 ரூபாயாகும்.

இப்பாடநெறியில் பங்குபற்றும் மாணவர்களுக்கு டி-ஷர்ட், தொப்பி, விமானவியல் பதக்கம் (Aviation Badge), மதிய உணவு, சிற்றுண்டிகள் மற்றும் குடிநீர் என்பன வழங்கப்படவுள்ளன.

அத்துடன், பாடநெறியின் இறுதியில் பங்குபற்றும் ஒவ்வொருவருக்கும் சான்றிதழும், குழு புகைப்படமும் வழங்கப்படும்.

பாடநெறிக் கட்டணங்களை இலங்கை வங்கியின் (Bank of Ceylon) இரத்மலானை கிளையில் உள்ள ‘Air Force Museum Welfare Fund’ என்ற பெயரிலான 0000229002 என்ற கணக்கிலக்கத்திற்கு வைப்பிலிட வேண்டும்.

பணம் செலுத்திய பின்னர், அதன் உறுதிப்படுத்தலை 0768184458 என்ற இலக்கத்திற்கு வாட்சப் ஊடாக அனுப்பி விண்ணப்பங்களை உறுதிப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects