நவீன வசதிகளுடன் கூடிய கொரிய மொழித்தேர்வு மையம் திறந்து வைப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தென் கொரியாவில் வேலைகளுக்குத் தேவையான மொழித் தேர்ச்சிக்காக நடத்தப்படும் தேர்வுகளுக்கான நவீன வசதிகளுடன் கூடிய புதிய கொரிய மொழித்தேர்வு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மையம் கண்டி, தலஹேனாவின், புதிய கண்டி வீதியில், வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவினால் 22.10.2025 அன்று திறந்துவைக்கப்பட்டது.

கொரிய அரசாங்க மனிதவள மேம்பாட்டு நிறுவனம் ஒரு புதிய வழிமுறை மூலம் கொரிய மொழித்தேர்வை செயல்படுத்தத் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டு முதல் நிறுவனத்தின் கோரிக்கைக்கு அமைய, சோதனை நடத்துவதற்கும் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பணியாட்களுக்கான தேர்வுகளை நடத்துவதற்கும் இந்த புதிய மையம் திறக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects