சமூக சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவனின் ஏற்பாட்டின் கீழ் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி ச.கோணேஸ்வரன் ஒருங்கினைப்பில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 07.02.2024 அன்று இடம் பெற்றது.
இதன் போது கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், நடப்பு வருடத்திற்கான செயற்றிட்டங்கள், மாற்றுத் திறனாளி அமைப்புக்களின் செயற்பாடுகள் மாற்று திறனாளிகளை வலுவூட்டி தொழில் வாய்ப்பை வழங்கல் இவ் வருட தடகள விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றது.
மாற்றுத் திறனாளிகளுக்கான தரவுத்தளம் ஒன்றை அமைத்தல் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் ஏ.அருள்ராஜ், சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாற்றத்திறனாளி அமைப்புக்களின் தலைவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










