தென்னை பயிர்ச்செய்கைக்கு காப்புறுதித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதிச் சபை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையில் புதிய தென்னை பயிர்ச்செய்கையை இலக்காகக் கொண்டு தென்னம்பிள்ளைகளுக்கான காப்புறுதித் திட்டம் ஒன்றை விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதிச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த காப்புறுதித் திட்டத்தின் கீழ், சலுகைக் கட்டணக் கொடுப்பனவின் அடிப்படையில் வறட்சி, வெள்ளம், அதிக மழை, சூறாவளி, மண்சரிவு மற்றும் காட்டு யானைகளின் தாக்குதல்களினால் தென்னை பயிர்ச்செய்கைக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது.

ஒரு தென்னம்பிள்ளைக்கு 40 ரூபாய் காப்புறுதி வாரிக் கட்டணமாக செலுத்துவதன் மூலம், வருடாந்தம் 550 ரூபாய் பெறுமதியான காப்புறுதி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என அச்சபை குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், அதிகபட்ச காப்புறுதி காலமான 6 ஆண்டுகளுக்கு 875 ரூபாய் வாரிக் கட்டணத்தின் கீழ், ஒரு தென்னம்பிள்ளைக்கு வருடாந்தம் 12,450 ரூபாய் பெறுமதியான காப்புறுதி இழப்பீட்டைப் பெற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இயற்கை அனர்த்தங்கள் மற்றும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் போன்ற அபாயங்களினால் தென்னை விவசாயிகளுக்கு ஏற்படும் நட்டங்களைக் குறைப்பதே இதன் நோக்கமாகும் என விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதிச் சபை தெரிவிக்கிறது.

இந்தக் காப்புறுதித் திட்டத்தின் மூலம், விவசாயிகள் மிகவும் பாதுகாப்பான முறையில் தென்னை கைத்தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects