மன்னார் மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இன்று (10.09.2025) மன்னார் மாவட்டச் செயலகத்தின் மருதம் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் கடந்த கூட்டக் குறிப்புகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் செயற்பாடுகள், கமநல அபிவிருத்தி நடவடிக்கைகள், வங்கிகளின் விவசாயத் தொடர்பான சேவைகள், விவசாயத் திணைக்களத்தின் செயற்பாடுகள், விதைகள் மற்றும் நடுகைப் பொருட்கள் தொடர்பான விவாதங்கள், கால்நடை பராமரிப்பு செயற்பாடுகள், நெல் ஆராய்ச்சி முன்னேற்றங்கள் மற்றும் பனை அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் ஆகியவை விரிவாக ஆராயப்பட்டன.
இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், மாவட்ட விவசாயப் பனிப்பாளர், நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர்கள், பல்துறைசார் திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மேலும் விவசாய அமைப்புகளின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










