பெற்றோல் வாகனங்களுக்கு எரிபொருள் QR முறையை நடைமுறைமைப்படுத்துவது நாளை (18.04.2026) முதல் மீண்டும் அமுலுக்கு வருகின்றது.
குறித்த அறிவித்தலை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், வாகன இலக்கங்களின் இறுதி இலக்கங்களின் பிரகாரம், ஒற்றை, இரட்டை தினங்களுக்கேற்ப குறித்த நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.
தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தை கருத்தில் கொண்டு, இம்மாதம் 12 ஆம் திகதி முதல் இன்று (17.04.2026) வரை குறித்த நடைமுறை இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










