பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க செல்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாட்டில் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க செல்பவர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அனர்த்த நிவாரண சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இடையூறு விளைக்காமல் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

ஊடகவிளலாளர்கள் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விரைந்து வரும் அனைவருக்கும் நன்றி.

இதே வேளை, சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பவர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அனர்த்த நிவாரண சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இடையூறு விளைக்காமல் செயற்படுங்கள்.

அத்துடன், வெள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளை புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க முயல்பவர்கள் தங்களது பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ளுங்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளில் பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects