2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

Dictionary.com 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக 67 ஐத் தேர்ந்தெடுத்துள்ளது.

67 என்ற எண்ணை வார்த்தையாக தேர்ந்தெடுத்திருப்பது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

இதற்கு காரணம் 67 என்பது ஒரு எண்ணாக அல்லாமல் குறியீடாக இருப்பதே ஆகும்.

அண்மைக் காலங்களாக சமூக வலைத்தளங்களில் ஜென் ஆல்பா சிறுவர், சிறுமிகள் 67 என்ற எண்ணை அதிகம் பதிவிடுகின்றனர்.

2010 – 2024 இடையில் பிறந்தவர்கள் ஜென் ஆல்பா ஆவர்.

அவர்களுக்கு 67 என்பது உற்சாகத்தை வெளிப்படுத்தும் ஒரு குறியீட்டு வழியாக மாறியுள்ளது.

டிக்டொக்கில் 67 என்ற ஹேஷ்டேக் 2 மில்லியன் பதிவுகளைத் தாண்டியுள்ளது. இதன் அர்த்தம் என்னவென்று தெரியாமல் பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ட்ரெண்டின் படி, இதை ‘அறுபத்து ஏழு’ என்று உச்சரிக்காமல், ‘சிக்ஸ்-செவன்’ என்றுதான் சொல்ல வேண்டும். 67 எப்படி குறியீடாக மாறியது என்பது உறுதியாகத் தெரியவில்லை.

இதற்கு ஒரு நிலையான வரையறை இல்லை, அதன் பயன்பாடு சூழலுக்குச் சூழல் மாறுபடும் என்று Dictionary.com தெரிவித்துள்ளது.

இதன் பயன்பாடு, அமெரிக்க ராப் பாடகர் ஸ்க்ரில்லாவின் ‘Doot Doot (6 7)’ என்ற பாடலிலிருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

பாடசாலைகளில் சில மாணவர்கள் ஆறு என்று சொல்லும்போது, மற்றவர்கள் ஏழு என்று கத்துகின்றனர்.

ஆசிரியர்கள் 67 என்ற எண்ணையே மாணவர்கள் உச்சரிக்கத் தடை விதிக்கும் அளவுக்கு 67 என்பது இளைய தலைமுறையின் குறியீடாக மாறியுள்ளது.

இது தொடர்பான Dictionary விளக்கங்களை பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்….

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects