இந்தியாவிலிருந்து நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி இந்த மாதத்தின் கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 16,383 இந்திய சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளனர்.
அத்துடன், குறித்த காலப்பகுதியில் பிரித்தானியாவில் இருந்து 10,743 பேரும், சீனாவிலிருந்து 6,832 பேரும், இத்தாலியிலிருந்து 1470 பேரும் இலங்கைக்குப் பிரவேசித்துள்ளனர்.
சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிக்கும் முகமாக நாட்டின் சுற்றுலாத்தளங்களை மேம்படுத்தும் நோக்கில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇