உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் 10.02.2024 அன்று ஜனாதிபதி செயலகம் இரண்டாவது முறையாகக்கூடி இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

இதன்படி, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை தீர்மானங்களை மேற்கொள்வதில் துல்லியமான தரவுகளும் தகவல்களும் மிக முக்கியமானவை எனவும், அவை இன்றி தீர்மானங்களை மேற்கொள்வதில் அபாயத்தை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாரில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

துல்லியமான தரவு மற்றும் தகவல் முறைமையை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்வதற்கும், அப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நெல் கொள்வனவு குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், நெல் கொள்வனவு செய்வதற்கு ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளின் கீழ் கொள்வனவு செய்யப்படும் நெல்லின் அளவைக் கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சலுகை விலையில் நுகர்வோருக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காகக் கூட்டுறவு மற்றும் சதொச வலையமைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

விலைக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதன் மூலம் நுகர்வோருக்கு உகந்த சந்தையை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதனிடையே, நாட்டு மக்களின் உணவு நுகர்வு தொடர்பில் ஆய்வு செய்து, ஆரோக்கியமான மக்களை உருவாக்கவும், உணவு விரயத்தைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு குழு உறுப்பினர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, தேசிய உணவுப் பாதுகாப்புக் கொள்கை கட்டமைப்பை நிறுவுதல், அத்தியாவசிய உணவுத் தகவல் கட்டமைப்பைப் பராமரித்தல், சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் புதிய திட்டத்தை உருவாக்குதல், விஞ்ஞான பூர்வமான சான்றுகளின் அடிப்படையில் உள்நாட்டு உற்பத்திகளை அதிகரித்து விநியோகிப்பதற்கான திட்டத்தை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects