விஞ்ஞான புனைகதைக்கான தேசியப் போட்டியில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்கள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

விஞ்ஞானத்தை பிரபல்யப்படுத்தும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய விஞ்ஞான மன்றானது உலக விஞ்ஞான தினமும் விஞ்ஞானம் தொடர்பான போட்டிகளில் தேசிய ரீதியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் 04.11.2025 அன்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இதில், விஞ்ஞான புனைகதை எழுதுவதில் முதலாம் இடத்தை வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையைச் சேர்ந்த ரூபிகா அருந்தவமும், இரண்டாம் இடத்தை சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த கேசிகா தயாகுமாரனும், மூன்றாம் இடத்தினை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த அட்சயா ஞானசந்திரனும் பெற்றுக் கொண்டனர். 

குறித்த நிகழ்வு தேசிய விஞ்ஞான மன்றத்தின் தலைவர் கலாநிதி சுதத் சமரவீர தலைமையில் இடம்பெற்றது.

மேலும், நிகழ்வில் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேசேன பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects