இலங்கையின் இறப்பர் பயிர்ச்செய்கைத் துறையை மேலும் வினைத்திறனான மற்றும் குணாதிசயம் மிக்க நிலைக்கு கொண்டு செல்லும் நோக்கில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்திற்கு 41 புதிய இறப்பர் அபிவிருத்தி அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (18.05.2026) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் நடைபெற்றது.
இறப்பர் பயிர்ச்செய்கைத் துறையில் நீண்டகாலமாக நிலவி வந்த உத்தியோகத்தர் பற்றாக்குறைக்கு தீர்வாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள இந்த புதிய அதிகாரிகள் குழு, இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் 05 பிரதேச அலுவலகங்களின் சேவை நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்காக இணைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, அமைச்சின் மேலதிக செயலாளர்கள் மற்றும்இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.









இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









