பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவசாயம் சாரா துறைகளுக்கான இணையவழித் தரவு சேகரிப்பு நடவடிக்கைகள் இன்று (02.07.2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இத் தரவு சேகரிப்பு நடவடிக்கைகள் இம் மாதம் 15 ஆம் திகதி வரை தொடரும் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் வாசன ஜயகொடி குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், வர்த்தகம், கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகளில் 50 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு இயங்கும் வணிக நிறுவனங்கள் இத் தரவு சேகரிப்பில் தங்களைப் பதிவு செய்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பானது, விவசாய மற்றும் விவசாயம் சாரா பொருளாதார நடவடிக்கைகளை தனித்தனியாக உள்ளடக்கும் வகையில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.
இதன் முதற்கட்டமாக, விவசாய நடவடிக்கைகள் குறித்த கணக்கெடுப்பு கடந்த 2025 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட நிலையில், விவசாயம் சாரா நடவடிக்கைகள் குறித்த இரண்டாம் கட்டக் கணக்கெடுப்பு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையில் இதற்கு முன்னர் இறுதியாக கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










