சீரற்ற வானிலை காரணமாக, விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் www.srilankan.com என்ற இணையதளத்தில் சமீபத்திய விமான பயண நிலவரத்தை சரிபார்த்துக் கொள்ளுமாறு ஸ்ரீலங்கன் விமான சேவை பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இல்லையெனில்,1979 (இலங்கைக்குள்) அல்லது 0094 117 771979 (சர்வதேசம்) என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலமாகவோ தொடர்புகொண்டு தகவல்களைப் பெறுமாறும் ஸ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.
இதற்கிடையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 6 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 6 விமானங்கள் மத்தள, இந்தியாவின் திருவனந்தபுரம் மற்றும் கொச்சி விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டதாக விமான நிலையப் பொறுப்பு அதிகாரி தெரிவித்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










