நாட்டில் நிலவும் தற்போதைய சீரற்ற வானிலை காரணமாக பல தேசியப் பூங்காக்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், யால தேசியப் பூங்காவில் உள்ள 1 முதல் 5 வரையான வலயங்கள் (Blocks 1 to 5) பார்வையாளர்களுக்காக மூடப்பட்டுள்ளதுடன், 6ஆம் வலயத்தில் (Block 6) மாத்திரம் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை, ஹோர்ட்டன்சமவெளி (Horton Plains), வஸ்கமுவ, குமண, வில்பத்து, மின்னேரியா மற்றும் கவுடுல்ல (Kaudulla) ஆகிய தேசியப் பூங்காக்கள் மறு அறிவித்தல் வரை முழுமையாக மூடப்பட்டுள்ளதாகவும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










